மாவட்டம் பற்றி
பார்வதி தேவியார் மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிட பட்டுள்ளதால் இப்பகுதி மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டு வரை “மயூரபுரம்” என்றும் பின்பு “மாயவரம்” என்றும் அழைக்கப்பட்ட இந்நகரம் 1982ல் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது “மயிலாடுதுறை” என பெயர் மாற்ற அரசாணை வெளியிடப்பட்டது. ஆன்மிக பூமி வைத்தீஸ்வரன் கோவில்,கீழப்பெரும்பள்ளம் போன்ற நவக்கிரகங்கள் மயிலாடுதுறை நகரத்திற்கு மிகவும் அருகில் உள்ளன.சைவமும் தமிழும் வளர்த்து தமிழ்த்தொண்டு செய்து வரும் தருமபுரம் ஆதினம் மற்றும் திருவாவடுதுறை ஆதினம் இம்மண்ணின் நீண்ட பாரம்பரியம் சான்றாகும். தேசத்தந்தையை ஈர்த்த தியாகபூமி 1915,1921,1927 என மும்முறை காந்தியடிகள் பாதம் பதித்த மண்.காந்தியுடன் தென் ஆப்பிரிக்காவில் தொண்டு செய்த தியாகி வள்ளியம்மையை பெற்ற தில்லையாடி இங்குதான் உள்ளது.அதற்கு ”தில்லையாடி வள்ளியம்மையின் பெயரால் ஒரு நினைவு மண்டபமும் தழிழக அரசால் கட்டப்பட்டுள்ளது.பழமையான நகராட்சி ஆங்கிலேயே ஆட்சியில் அப்போதைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில்,(ஆந்திரம் உள்ளடக்கியது) 29 ஊர்கள் மட்டுமே நகரம் என அடையாளம் காணப்பட்டு நகராட்சிகளாக ஆக்கப்பட்டதில் மயிலாடுதுறை நகராட்சியும் ஒன்று.மயிலாடுதுறை நீதிமன்றமும், சப் கலெக்டர் அலுவலகமும் 100 ஆண்டுகள் பழைமையான வரலாறுடையது.இங்குள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி 148 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பள்ளி என்பதுடன் சிறந்த புகழ்பெற்ற கல்வியாளர்களை உருவாக்கிய பள்ளி இந்நகரின் நடுவில் அமைந்துள்ளது. 1877ல் சென்னை-தூத்துக்குடி ரெயில்பாதை அமைக்கபட்ட போது முக்கிய இரயில் சந்திப்பாக மயிலாடுதுறை இருந்து வந்துள்ளது.
சித்தர் வாழ்ந்த சிறந்த மண்
ஆயுர்வேத மருத்துவத்தின் பிதாமகன் “தனவந்திரி” சித்தர் வாழ்ந்து சமாதியடைந்து வைத்தீஸ்வரன்கோயில் தலம் மற்றும் சித்தர் திருச்சிற்றம்பல நாதர் வாழ்ந்த” சித்தர்காடு” தற்போதும் மயிலாடுதுறை வட்டத்தில் ஒரு வருவாய் கிராமமாக உள்ளது.
”கம்பராமயணம்” தந்த கம்பர் பிறந்த மண் –தேரிழந்தூர் தமிழ்மொழியின் முதல் புதினம் “பிரதாப முதலியார் சரித்திரம்” வழங்கிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை வாழ்ந்தது –மாயூரம்”பொன்னியின் செல்வன்” வரலாறு புதினம் எழுதிய கல்கி[...]
- விசி ஹோஸ்ட் (தொழில்நுட்பம்) பதவிக்கு ஆட்சேர்ப்பு – சென்னை உயர் நீதிமன்றம் & உயர்நீதிமன்ற மதுரை கிளை
- மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற அறிவிப்பு – மாவட்ட நீதித்துறையில் eSewa Kendra தொழில்நுட்ப பணியாளர் பணிக்கான ஒப்பந்தப் பணியாளர்களாக ஆட்சேர்ப்பு
- நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகள், ஓய்வுபெற்ற மற்றும் பணியாற்றும் உதவி அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்டப் பேராசிரியர்கள் ஆகியோரிடம் இருந்து தீர்ப்புகளுக்கான தலைப்புக் குறிப்புகளைத் தயாரிப்பத
- இரண்டாவது மேல்முறையீடு, குற்றவியல் மேல்முறையீடு மற்றும் அனைத்து ஜாமீன் விண்ணப்பங்கள் மற்றும் அனைத்து கிரிமினல் எம்.பி.க்களுக்கும் வழக்குகளின் கட்டாய மின்-தாக்கல்
- அனைத்து அரசு அதிகாரிகள், அரை அரசு அதிகாரிகள், அரசு நிறுவனங்கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளால் வழக்குகள் மற்றும் மனுக்களை மின்-தாக்கல் செய்வது குறித்த அறிவிப்பு
- அறிவிப்பு – வழக்கு விசாரணை – ஹைப்ரிட் வீடியோ கான்பரன்ஸ் முறை
- மின்-தாக்கல் 3.0 இடம்பெயர்வு மற்றும் செயல்படுத்தல்
- அறிவுசார் சொத்து வழக்குகள் மற்றும் நடுவர் தொடர்பான வழக்குகளை மின்-தாக்கல் செய்தல்
காட்டுவதற்கு இடுகை இல்லை
காட்டுவதற்கு இடுகை இல்லை
மின்னணு நீதமன்ற சேவைகள்
வழக்கு தகுநிலை
நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு
வழக்கு பட்டியல்
வழக்கு பட்டியல்
முன்னெச்சரிப்பு மனு
முன்னெச்சரிப்பு மனு
சமீபத்திய அறிவிப்புகள்